திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (17:47 IST)

விஜய்யின் அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதா?

கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர்களை நடிகர் விஜய்யும் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே அவர் நடத்தி வரும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் காரணமாக நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வரும் மே மாதம் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட கூடும் என்றும் கூறப்படுகிறது
 
ஆனால் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும் விஜய் எந்த ஒரு அரசியல் கட்சியும் தொடங்கவில்லை என்றும் அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும் இந்த வதந்தி மிக வேகமாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது