திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (10:59 IST)

எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் சம்மன் - கண்ணா மூச்சு ஆட்டம் முடிவிற்கு வருமா?

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக விமர்சித்த பாஜக பிரமுகர் வருகிற 20ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 
பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில், எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.  
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும், எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவரை கைது செய்ய போலீசாருக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், உடனடியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். 
 
ஆனாலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 50 நாட்களுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருக்கிறார். ஆனால், போலீசாருடன் அவர் பாதுகாப்பாக காரில் செல்லும் புகைப்படங்களும், அவரின் குடும்ப விழாக்களில் கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், வருகிற ஜூன் 20ம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
 
எனவே, இந்த நாட்களாக ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த எஸ்.வி.சேகரின் கண்ணாமூச்சு நாடகம் விரைவில் முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.