1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (09:51 IST)

கடவுள் உயிர் கொடுப்பார் - சடலத்துடன் 3 நாள் வாழ்ந்த அம்மா - தம்பி

ஆந்திராவில் இறந்த பெண்ணின் உடலுக்கு கடவுள் உயிர் தருவார் என நம்பி, அவரது தாய் மற்றும் தம்பி பிணத்துடன் மூன்று நாள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஜங்கரெட்டிகுடம் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பில் தாய் மகன் மற்றும் மகள் வசித்து வந்தனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு அந்த தாயின் மகள் இறந்துள்ளார். ஆனால் பிணத்தை புதைக்காமல் அவரது தாய் மற்றும் தம்பி வீட்டில் இருந்துள்ளனர்.
 
அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சம்மந்தப்பட்ட வீட்டிற்கு சென்று பார்த்தனர். அந்த பெண்ணின் தாயும் தம்பியும் தங்கள் அன்றாட வேலையை செய்து கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்த தாயிடம் உங்கள் மகள் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். அதற்கு அவர்கள் மகளுக்கு உயிர் கொடுத்த கடவுளே அவளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பார் என கூறினர்.
 
பின் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.