தொடர்புடைய செய்திகள்
- 'நானும் ஒரு காலா' தான்: ரஞ்சித்துக்கு குஜராத் எம்.எல்.ஏ பாராட்டு
- உபதேசம் எல்லாம் மத்தவங்களுக்கு தானா மிஸ்டர் எச்.ராஜா?
- பாஜகவை தோற்கடிக்க இதையும் செய்வேன்: அகிலேஷ் யாதவ் பேட்டி
- ஜூலை 9ல் அமித்ஷா தமிழகம் வருகை: இந்த முறையும் ரத்தாகுமா?
- கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும்- பா.ஜ.க. எம்.பி சர்ச்சைப் பேச்சு
தாஜ்மஹாலை சிவாஜி மஹால் என பெயர் மாற்றலாம் - பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
தாஜ்மஹால் என்ற பெயரை சிவாஜி மஹால் என்று பெயர் மாற்ற வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
நேற்று ஒரு பாஜக எம்.பி கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உத்திரபிரதேத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர் சிங், இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்ட வரலாற்று சின்னங்கள், சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் அல்லது சிவாஜி மஹால் என்று மாற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் எதிர்கட்சியினரும் பொதுமக்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
