1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 2 நவம்பர் 2019 (21:32 IST)

கல்வி கட்டணத் தொகைகளை சமமாக்க வேண்டும் - பள்ளிகள் மாநில சங்க பொதுக்குழு

குஜராத், உத்திரப்பிரதேஷம் மாநிலங்கள் வழங்கப்படும் கல்வி கட்டணத் தொகைகளை சமமாக அளிக்க வேண்டுமென்றும், தமிழகத்தில் பள்ளிகளுக்கு சொத்துவரியை நீக்க வேண்டுமென்றும் தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிக் உயர்நிலை மேல்நிலை சி.பி.எஸ்.இ ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் மாநில சங்க பொதுக்குழு கூட்டத்தில் வேண்டுகோள் – மாநில தலைவர் பி.ராஜூ கரூரில் பேட்டியளித்தார்.
தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிக் உயர்நிலை மேல்நிலை சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் மாநில சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கரூர் காந்திகிராமத்தில் உள்ள மேக்மில்லன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் பி.ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறுவனர் செல்வ.இரமேஷ் பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். செயலாளர் கே.முகமது பஜ்லுல் ஹக் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கே.ரங்கராஜூ, கரூர் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
 
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், 5 வது மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அறிவித்துள்ள பொதுத் தேர்வை கைவிட வேண்டும் என்று கரூரில் நடைபெற்ற தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிக் உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
 இதில் மாநில தலைவர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய போது., 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர் அங்கீராத்துடன் இயங்கி வரும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழஙக வேண்டும், 5 வது மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அறிவித்துள்ள பொதுத்தேர்வை கைவிட வேண்டும் ஆர் டி இ மாணவர் சேர்க்கையை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என்றார். மேலும் இரண்டாண்டுகளாக கட்டணத் தொகை வழங்கப்பட வில்லை ரூ 300 கோடிக்கு மேல் வழங்க வேண்டுமென்றார்.
 
 மேலும் பள்ளிகளுக்கு சொத்துவரி நீக்க வேண்டுமென்றும், குஜராத், உத்திரப்பிரதேஷம் மாநிலங்களில் செயல்படும் பள்ளிகளில் பள்ளிக் கல்விக் கட்டணங்கள் தமிழகத்திலும் ஒரே மாதிரியான கல்விக்கட்டணங்கள் நிர்ணயம் செய்ய அரசு ஆவணம் செய்ய வேண்டுமென்றும் பேட்டியளித்தார்.
 பெ.ராஜூ ,மாநிலத்தலைவர் , தமிழக நர்சரி, பிரைமரி மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலை சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, பள்ளிகள் ,மாநில சங்கம்  .