1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (08:12 IST)

விடுமுறை நாளில் வகுப்புகள் எடுத்தால் கடும் எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

school
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் விடுமுறை நாளில் வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகளை எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது
 
பள்ளி மாணவர்களுக்கு சனி ஞாயிறு கிழமைகளில் கண்டிப்பாக விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் சனி ஞாயிறு கிழமைகளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்றும் அதேபோல் அரசு விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் வகுப்புகள்  எடுக்க கூடாது என்றும் மீறினால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் வேலை நாட்கள் அல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம் என்று மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது