வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:13 IST)

20 மணி நேரம் மின்வெட்டு: வீட்டை காலி செய்யுங்கள் என மின்வாரிய அதிகாரிகளின் திமிர் பதில்!

power
திருவாரூர் அருகே 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் செய்த நிலையில் வீட்டை காலி செய்துவிட்டு மின்சாரம் இருக்கும் பகுதிக்கு சென்று வாழுங்கள் என மின்வாரிய அதிகாரி திமிராக பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் வட்டம் என்ற கிராமத்தில் நேற்று 20 மணி நேரம் மின்வெட்டு இருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்துவிட்டு மின்சாரம் இருக்கும் பகுதிக்குச் செல்லுங்கள் என அதிகாரிகள் தெரிவித்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மின் இணைப்பு வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி செய்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதன் காரணமாக சில மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.