வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (10:49 IST)

அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக இருந்தால்? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

Education
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்ற கல்வி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது 
 
அதேபோல் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் முப்பதுக்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலோ அல்லது ஊரக பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலோ வேறு பள்ளிக்கு மாற்ற கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.