திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தின் 2 தாலுகாக்களில் பள்ளிகள் விடுமுறை!

rain
தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இரண்டு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அமிரித் அவர்கள் அறிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது