1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (21:39 IST)

செப்-26 முதல் 14 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

holiday
செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகை கொண்டாடும் போது இரண்டு வாரங்கள் விடுமுறை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது
 
அந்த வகையில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க உள்ளதாக மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
செப்டம்பர் 24 முதல் 14 நாட்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தசரா விடுமுறை என்றும் விடுமுறை முடிந்து அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெலுங்கானா மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.