வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (11:13 IST)

முகம் கொடுத்து பேசாத எடப்பாடி: பாஜக மீது கடும் அதிருப்தி!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக தங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவுடன் சுமூகமாக அவர்களுக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.
 
இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என கடுமையாக விமர்சித்திருப்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக தனது அதிருப்தியை தம்பிதுரை மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் தெரிவித்துள்ளார். குமரி மாவடத்தில் ஏற்பட்ட ஓகி புயல் பாதிப்பை பார்வையிடம் பிரதமர் மோடி சென்றிருந்தார். இந்த ஆய்வுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணான் ஆகியோர் சென்றிருந்தனர்.
 
அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வந்து பேசியபோது அவர் முகம் கொடுத்து பேசாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டார். அதன் பின்னர் தனது அதிருப்தியை தம்பிதுரையிடம் தெரிவித்தார்.
 
நாம் அவங்க சொல்றதை கேட்டுட்டுதானே இருக்கோம். பிறகு ஏன், ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம்னு பொன் ராதாகிருஷ்ணன் ஆர்கே நகரில் பேசினாரு. இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்னு பிரதமர்கிட்ட கேளுங்க என தம்பிதுரையிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக மீதும், பொன்னார் மீது கூறிய அதிருப்தியை தம்பிதுரை அப்படியே பிரதமர் மோடியிடம் கூறிருக்கிறார். ஆனால் பிரதமர் அதற்கு எந்தவித ரியாக்‌ஷனும் காட்டாமல் அதனை கேட்டுவிட்டு எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டார்.