செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 நவம்பர் 2021 (15:40 IST)

பிரதமருக்கு நன்றி கூறிய எடப்பாடி பழனிசாமி!

முன்னாள் முதல்வரும் எம்.எல்.ஏவுமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி கூறி டுவீட் பதிவிட்டுள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சியமைத்துள்ளது.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை அறிவித்த நிலையில்,தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இது உலகளவில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி கூறி டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றமைக்கும்,குறைந்தப்பட்ச ஆதார விலை (MSP)  நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும்  எனது நன்றிகளை மாண்புமிகு  பாரத பிரதமர் @narendramodi அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.