மக்களை கேட்டுதான் முடிவெடுக்கணும்! – பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

edapadi
Prasanth Karthick| Last Modified திங்கள், 20 ஜனவரி 2020 (19:35 IST)
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் மக்களை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு பல்வேறு விவசாய அமைப்புகளும், மக்களும் பல ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். இந்நிலையில் புதிதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை குழாய்களை அமைக்கலாம் என்றும் அதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மக்களின் கருத்துகளை கேட்க அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும், அதனால் புதிய அறிவிப்பை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியும் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :