திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (16:59 IST)

24 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வேலூரில் 24 வயது இளம்பெண், மூவரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் வேலூரில் உள்ள ஒரு பூங்காவில் கடந்த சனிக்கிழமை இரவு 9.15 மணியளவில் பூங்கா பூட்டப்படும் நேரத்தில் 24 வயது இளம்பெண், தனது நண்பரான 20 வயது இளைஞருடன் அப்பூங்காங்குள்ளே நுழைந்துள்ளார்.

இதனை கண்ட மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், பூங்காக்குள் நுழைந்து இளைஞனை கத்தியால் மிரட்டி அங்கிருந்து ஓட வைத்துவிட்டு, அப்பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். பின்பு அப்பெண்ணின் நகை மற்றும் செல்ஃபோனை திருடி தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து அப்பெண் அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று தனது சகோதரனிடம் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறாமல், தனது செல்ஃபோன் மற்றும் நகைகளை பறித்துவிட்டனர் என்று மட்டும் கூறியுள்ளார்.

அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், மருத்துவர்களிடம் தான் ”பலாத்காரம் செய்யப்பட்டேன்” என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் பலாத்காரம் செய்தவர்களின் அங்க அடையாளங்களை அப்பெண்ணிடம் தெரிந்துக்கொண்டு விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.