1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold price details

இதுக்கு இல்லையா ஒரு எண்டு? மீண்டும் உயரும் தங்கம் விலை!

Tamilnadu
கடந்த சில நாட்களாக தங்கம் விலை மெல்ல குறைந்து வந்த நிலையில் மீண்டும் உயர தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று முதன்முறையாக 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.576 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,800 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.72 உயர்ந்து ரூ.4,975க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் உயர தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இந்தியர்களுக்கு குடியுரிமை குடுத்துட்டேன்; எனக்கே ஓட்டு போட்டுடுங்க! – ட்ரம்ப் பலே திட்டம்!