திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (13:18 IST)

தமிழகத்தில் ஒரு உயிரும் போக கூடாது – சபதம் எடுத்த எடப்பாடியார்

கொரோனாவால் தமிழகத்தில் ஒரு உயிரும் போகக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாய் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் வர உள்ளது. மக்கள் அன்றாட வசதிகளுக்கு சிரமப்படக் கூடாது என்பதற்காக நிவாரண தொகை, ரேசன் பொருட்கள் வழங்கள் உள்ளிட்டவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைய உள்ள தருவாயில் கொரோனா குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “இந்த கொடிய கொரோனா வைரஸால் தமிழ்நாட்டில் ஒரு உயிரும் போகக் கூடாது. அதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் அயராது செய்து கொண்டே இருப்போம். இந்த பணியில் தமிழக அரசிற்கு துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.