1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (11:29 IST)

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை!

பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது மார்ச் 22ஆம் தேதி அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கைதட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் 
 
இதனை அடுத்து கடந்த 22ம் தேதி சுய ஊரடங்கு உத்தரவு நடந்தது என்பதும் மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டிற்கு முன் வெளியே வந்து கைதட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் விவகாரம் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி பேசும்போது எந்தவிதமான அறிவிப்பை வெளியிடுவார் என்பதை அறிய நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இன்றைய தினம் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்கள் அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது