1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (17:35 IST)

பிடிஆர் கூறிய ரூ.30,000 கோடிக்கு ஸ்டாலின் இன்னும் பதில் சொல்லவில்லை: எடப்பாடி பழனிசாமி

பிடிஆர் கூறிய 30 ஆயிரம் கோடிக்கு இன்னும் முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை என்றும் எப்போது அவர் பதில் சொல்வார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தபோது ’திருவண்ணாமலை ஆன்முக பூமி என்றும் இங்கு பேச வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி என்றும் கூறினார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை மத்திய தொல்லியல் துறை கைப்பற்ற முயன்றபோது அதை தடுத்து நிறுத்தியது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றும் அதிமுக ஆட்சி காலத்தில் தான் கிரிவல பாதை 68 கோடியில் மேம்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்

திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சி காலத்தில் முப்பதாயிரம் கோடி ஊழல் செய்வதாக தமிழக நிதி அமைச்சர் ஆக இருந்த பி டி ஆர் பழனிவேல்ராஜன் கூறியதாகவும் ஆனால் அவரது இந்த கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வரை பதில் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்

ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களை கூடவே அழைத்துச் சென்று அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்


Edited by Siva