திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2024 (16:01 IST)

முதல்வருக்கு அனுப்பிய உளவுத்துறை ரிப்போர்ட் நகல் ஈபிஎஸ்-க்கு சென்றாதா? டென்ஷனில் ஆளும் தரப்பு..!

stalin
தமிழகம் தேர்தல் நிலவரம் குறித்த உளவுத்துறை ரிப்போர்ட் முதல்வரிடம் அளிக்கப்பட்ட நிலையில் அதன் நகல் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சென்றதாக கூறப்படுவது ஆளும் தரப்பை படு டென்ஷன் ஆக்கி உள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் உளவுத்துறை தமிழகம் முழுவதும் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அலசி ஆராய்ந்து மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், நெல்லை ஆகிய பகுதிகளில் திமுக அமைச்சர்கள் மெத்தனமாக இருப்பதாகவும் இப்படியே இருந்தால் இந்த ஐந்து தொகுதிகளை திமுக இழக்க நேரிடும் என்றும் அறிக்கையை அனுப்பியுள்ளதாம்.
 
இந்த அறிக்கையை பார்த்து உடனே முதல்வர் மு க ஸ்டாலின் சாட்டையை சுழற்றிய நிலையில் இந்த அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பி எடப்பாடி பழனிச்சாமிக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது

ஐந்து தொகுதிகளிலும் நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் எனவே அதை பயன்படுத்துங்கள் என்றும் மதுரை சென்ற எடப்பாடி பழனிச்சாமி சீனியர் அமைச்சர்களை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது

உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட் எப்படி எடப்பாடி கைக்கு போனது என்று படு டென்ஷனில் ஆளும்தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva