வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 டிசம்பர் 2023 (16:05 IST)

நான் சிறைக்கு செல்வேனா? ஓபிஎஸ் தான் சிறை செல்வார்: எடப்பாடி பழனிசாமி

நான்  சில விஷயங்களை சொன்னால் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார் என நேற்று ஓ பன்னீர்செல்வம் கூறிய நிலையில் நான் சிறைக்கு செல்ல மாட்டேன், ஓபிஎஸ் தான் சிறைக்கு செல்வார் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
 
ஓபிஎஸ் விரைவில் சிறை செல்வது உறுதி என்றும் அவர் மீது பல வழக்குகள் இருக்கிறது என்றும் அந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தால் நிச்சயம் அவருக்கு தண்டனை கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

அவரது குடும்பத்தினர் அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்கள் என்றும் என் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கினை வாபஸ் பெறாமல் உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் சென்று நிரபராதி என நான் நிரூபித்தேன் என்றும் தெரிவித்தார்

ஜெயலலிதாவிற்கு இரண்டு கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக ஓபிஎஸ் கூறுவது மிக மோசமான வார்த்தை தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இடையில் வந்து சேர்ந்தவர்தான் ஓபிஎஸ் என்றும் நான் 1985 ஆம் ஆண்டு முதலில் கட்சிகள் விசுவாசமாக பயணம் செய்து வருகிறேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Edited by Siva