1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 31 மார்ச் 2022 (15:15 IST)

மோடி, அமித்ஷாவை முதல்வர் சந்திப்பது இதற்காகத்தான்: எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்ற நிலையில் இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். மேலும் அவர் இன்னும் சில மணி நேரங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார் 
 
பிரதமரை சந்தித்தபோது தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி உள்பட பல்வேறு விஷயங்களை அவர் கோரிக்கை வைத்தார் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஏன் சந்திக்கிறார் என்பது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
 
பதவிக்கு வந்த 10 மாத காலத்தில் பல்வேறு சிக்கல்களில் முதலமைச்சர் சிக்கியிருப்பதாகவும் அந்த சிக்கல்களில் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்த முதல்வர் டெல்லி சென்று இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்