1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 31 மார்ச் 2022 (09:09 IST)

லூலு நிறுவனத்தை முதலில் அழைத்தது நாங்கள் தான்: அதிமுக முன்னாள் அமைச்சர்!

லூலு நிறுவனத்தை முதலில் அழைத்தது நாங்கள் தான்: அதிமுக முன்னாள் அமைச்சர்!
சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் சென்ற போது தமிழகத்தில் ரூபாய் 3500 கோடி முதலீடு செய்ய லூலு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க லூலு குழுவினரை முதலில் அழைத்தது நாங்கள் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிறுவனம் தற்போது தமிழ்நாட்டுக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
துபாயில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லூலு  நிறுவனம் ரூ 3500 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது