சூப்பர் ஸ்டார் கேட்டதால் , நான் அப்படி ஆடினேன் ! - நடிகை தமன்னா ‘ ஓபன் டாக் ’

thamanna
Last Updated: செவ்வாய், 11 ஜூன் 2019 (16:41 IST)
 பிரபல மசலா பொருளுக்கான விளபரத்தில் மாடலாகத் தோன்றி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை தமன்னா. பின்பு அவர் சினிமாவில் அறிமுகமாகி கேடி, பையா, சுறா, வீரம் ஆகிய, பாகுபலி ஆகிய படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு  சினிமாவில் தனக்கென  ஒரு தனியிடம் பிடித்துக்கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தேவி படத்தை அடுத்து, சமீபத்தில் பிரபுதேவாவுடன் தமன்னா நடித்து வெளியான தேவி 2 நன்றாக ஓடிக்கொண்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது தெலுங்கில், தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ’சாயிரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில் இதுகுறித்து தமன்னா கூறியதாவது :
 
நடிகர் சிரஞ்சீவி கேட்டுக்கொண்டதால் நான் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டேன். அதன்படி ஆடினேன். மேலும், என்னை அந்தப்பாடலுக்கு தேர்வு செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :