1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (15:35 IST)

ஆளுமை மிக்க தலைவர் நான் இல்லை: ஈபிஎஸ் பேச்சு!!

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. 

 
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. 
 
இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் பழனிசாமி பின்வருமாறு பேசினார், 
 
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் இல்லை. கட்சி கொடுத்த பணியை சிறப்பாக செய்துவருவதாக நம்புகிறேன். தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி. 
 
நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன். சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம் என பேசினார்.