1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (12:37 IST)

நாளை முதல் அம்மா உணவகங்களில் இலவச உணவு! – முதல்வர் அறிவிப்பு!

நாளை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஐந்து கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இப்பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்களுக்கு சென்னையில் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.

இதனால் மக்கல் பலர் அன்றாட உணவுக்கு சிரமப்பட வேண்டி வரலாம் என்பதை கருத்தில் கொண்டு முந்தைய ஊரடங்குகளில் செயல்படுத்தப்பட்டது போலவே இந்த பொதுமுடக்கத்திலும் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.