1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi palanisamy is qualified for pm post

பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது: செல்லூர் ராஜூ

பிரதமர்
எதிர்காலத்தில் பிரதமர் ஆகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமி ஒருவருக்கு மட்டுமே உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். 
 
அதிமுக திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல், இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை, எத்தனையோ கட்சிகள் வரும் போகும், ஆனால் திமுக பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விட மாட்டார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார். 
 
இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான் என்றும் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் ஆகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார். 
 
மோடி பிரதமர் ஆவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சர் ஆவார் என யாராவது நினைத்தார்களா? அவர் சாதாரண ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்தவர். அவருடைய உழைப்பால் உயர்ந்தார், அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமராக உயர்வார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த மருத்துவர்: கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!