1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (13:59 IST)

மோடிக்கு சவால்விடும் தலைவர் எதிர்க்கட்சிகளில் யாரும் இல்லை: முன்னாள் முதல்வர் பேட்டி..!

PM Modi
பிரதமர் மோடிக்கு சவால் விடும் வகையில் எதிர்க்கட்சிகளில் யாரும் இல்லை என பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசியல் அங்கம் வகித்து அதன் பின்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியேறியவர் ஜிதன் ராம் மஞ்சி. 
இந்த நிலையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இன்று முதல் எங்கள் கட்சி பாஜக தலைமையிலான கூட்டணிகள் இணைந்துள்ளது என்றும் இது குறித்து அமித்ஷாவிடம் பேசிவிட்டோம் என்றும் தெரிவித்தார். 
 
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கலாம் ஆனால் அவர்களுக்கு என்று ஒரு முகம் இருக்கும் என்றும் பிரதர் மோடிக்கு சவால் விடும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் கூட்டணியில் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva