திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (23:10 IST)

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை அதிமுகவில் இணைந்த திமுகவினர்

karur
கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த திமுகவினர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

திமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி  முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் முன்னிலையில்  இணைந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியை சேர்ந்த A.R. உமர் பாரூக், O.R.A. சரிப், S.M.அஸ்முல்லா ஆகியோர்   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். 
 
இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி நகரச் செயலாளர் K.M. சாதிக் பாஷா, பள்ளப்பட்டி பொறுப்பாளர் K.R.L. தங்கவேல், கரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.