புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (11:50 IST)

தடை உத்தரவு பிரபுவுக்கும் பொருந்தும்: பேரவை செயலகம்

எம்.ஏல்.ஏ பிரபு சபாநாயகரின் நோட்டிஸுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கேட்ட நிலையில் அவர் பதில் அளிக்க தேவையில்லை என பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
 
தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.   
 
இந்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட மூன்று எம்.எல்.ஏக்களில் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும் சபாநாயகர் தங்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்து சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கு தொடராத எம்.ஏல்.ஏ பிரபு விளக்கம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என கேட்டிருந்தார். 
 
இதற்கு பேரவை செயலகம், உச்சநீதிமன்ற விதித்த இடைக்கால தடை வழக்கு தொடராத எம்.ஏல்.ஏ பிரபுவுக்கும் பொருந்தும். எனவே, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என தகவல் தெரிவித்துள்ளது.