1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூன் 2020 (19:35 IST)

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை: ரிசல்ட் என்ன?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கொரனோ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையின் ரிசல்ட் வந்து விட்டதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட விழா ஒன்றில் போட்டோகிராபராக பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்தது 
அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிந்து தற்போது வந்துள்ளதாகவும் அவருக்கு நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளதால் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் 
 
தமிழக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்பட பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வருக்கு கொரோனா இல்லை என்ற தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது