செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2025 (12:17 IST)

விஜய் ரூபானியின் உயிரை பறித்த லக்கி நம்பர் 1206..? இப்படி ஒரு விதியா?

விஜய் ரூபானியின் உயிரை பறித்த லக்கி நம்பர் 1206..? இப்படி ஒரு விதியா?

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் லக்கி நம்பர் நம்பிக்கை தற்போது வைரலாகியுள்ளது.

 

நேற்று மதியம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 (போயிங் 787) விமானம் சில வினாடிகளிலேயே மீண்டும் பூமியில் மோதி வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர 241 பேரும் பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜயபாய் ரூபானியும் காலமானது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய் ரூபானி தான் வாங்கிய முதல் கார் தொடங்கி அனைத்திலுமே தனது லக்கி நம்பரான 1206 என்ற எண் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். தான் வாங்கிய அனைத்து வாகனங்களுக்கும் ரூபானி 1206 என்ற எண்ணையே வாங்கினார். நேற்று நடந்த விமான விபத்தில் கூட விஜய் ரூபானி 12வது நபராக போர்டிங் செய்திருந்தார்.

 

இதில் ஆச்சர்யமும் சோகமும் என்னவென்றால் அவர் விமான விபத்தில் இறந்த நாளும் 12.06 அவரது லக்கி நம்பரான 1206 உடன் பொருந்தி போனதுதான். 

 

Edit by Prasanth.K