1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edapadi palanisamy to vaccinate himself today

இன்று கொரோனா ஊசி போட்டுக்கொள்ளும் முதல்வர்!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசியை இன்று சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் போட்டுக்கொள்ள உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்திய அரசு கொரோனா தடுப்பூசியை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கி வருகிறது. இதையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட சினிமாக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ஆகியவர்கள் போட்டுக்கொண்ட நிலையில் இன்று காலை சென்ன்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சிறுவனுக்கு சொன்னபடி ஷூ வாங்கி அனுப்பிய ராகுல்காந்தி!