வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (07:48 IST)

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட இந்தியாவின் மிக வயதான பெண்!

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட இந்தியாவின் மிக வயதான பெண்!
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவை அனுபவித்த மக்கள் தற்போது தான் ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்
 
மேலும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை பிரதமர் உள்பட பலரும் கொரோனா வைரஸை போட்டுக் கொண்ட நிலையில் தற்போது இந்தியாவிலேயே மிக அதிக வயதான பெண் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார் 
 
பெங்களூரை சேர்ந்த 103 வயது பெண் கமலா என்பவர் இந்தியாவிலேயே மிக வயதான பெண் என்ற பெருமையை கொண்டவர். அவருக்கு பெங்களூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவின் மிக வயதான பெண்ணுக்கு குழந்தை தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது