திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 மே 2019 (11:41 IST)

நோ கமெண்ட்ஸ்: கமல் குறித்து பேச மறுத்த முதல்வர்!

கமல்ஹாசனின் இந்து தீவிரவாத பேச்சு குறித்து பதில் சொல்ல இயலாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
அரவக்குறிச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் பேசியதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் இந்து மதம் என்ற குறிப்பே கிடையாது என்றும் இந்து மதம் என்பது ஆங்கிலேயர் கொடுத்த அடையாளம் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறாரே இது குறித்து உங்களது கருத்து என்ன? என கேட்கப்பட்டது.
 
அதற்கு அவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து யாரும் ஊடகத்திலோ, பத்திரிகையிலோ, அரசியல் கட்சித் தலைவர்களோ பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளது. அந்த அடிப்படையில் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலையில் உள்ளேன் என தெரிவித்தார்.