வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (18:22 IST)

மாணவர்களுக்கு இணையவழி வகுப்பு - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

கொரோனா இந்தியாவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவருவதால் மத்திய தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சில தளர்வுகள் அமலில் இருந்தாலும்கூட பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கக்கூடாது.
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  நாளைக்கு இரண்டு முறை 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் எடுக்கபடுகின்றன.

9 ஆம் வகுப்புய் முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் ஒரு நாளைக்கு 30 முதல் 45 வரை என 4 முறைக்கு மிகாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

எந்த ஒரு ஆன்லைன் வகுப்பும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும்.

ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6 ஆன்லைன் பாடங்கள் என ஒரு வாரத்திற்கு 28 ஆன்லைன் பாடங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வேலை நாட்களில் காலை 9 முதல் மாலை 5 மணிக்குள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

பிரீகேஜி, எல்கேஜி யுகேஜி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.