தமிழ்நாட்டில் மின் கட்டணம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாட்டில் மின் கட்டணம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
மற்ற மாநிலங்களில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபற்றி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று விளக்கம் அளித்திருந்தது.
அதில், தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை; அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும், வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவில்தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று முதல்வர் முக.ஸ்டாலின் மின் கட்டணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், வீட்டு இணைப்புகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை; மத்திய அரசின் விதிப்படி 4.07 சதவீதம் கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆனால், 2.18 சதவீதம் ஆக அதைக் குறைந்து அந்த தொகையையும் மின்வாரியத்திற்கு மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.