தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைன் மூலமாக இறுதி ஆண்டு தேர்வுகள்! – உயர்கல்வித்துறை திட்டம்!
- ஆன்லைன் வகுப்பு அவசியம் இல்ல! பள்ளிக்கல்வி ஆணையம்! – மாணவர்கள் ஹேப்பி!
- சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு !
- காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா - ஹெச், ராஜா
- பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது - AICTE
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு தேதி: அண்ணா பல்கலை அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பிஈ அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த வழக்கின் முடிவில் தான் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டுமா? இல்லையா? என்பது தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இருப்பினும் யுஜிசி அறிவுரைப்படி பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தமிழகம் உள்பட அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் சற்று முன்னர் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கும் இந்த தேர்வு செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
