செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 31 மே 2023 (21:40 IST)

மொழிப்பாடங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்- அமைச்சர் பொன்முடி

Ponmudi
இனி 12 ஆம் வகுப்பு போலவே பல்கலைக்கழகங்களில்  ஒரே மாதிரியான காலகட்டத்தில் தேர்வுகள்  நடத்தி முடிவுகள் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:'' மொழிப்பாடங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டும்.  தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் தேவைப்பட்டால் பாடத்திட்டத்தில் 25 சதவீதம் மாற்றம் செய்யலாம் என்றும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்பிடிப்பு முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக'' தெரிவித்துள்ளார்.

மேலும், ''மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்தால் ஏற்கனவே கட்டிய தொகையை கல்லூரிகள் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும், மாணவர்கள் படிக்கும்போது, வேலைவாய்ப்பு அளிப்பதுதான் நான் முதல்வன் என்ற திட்டம்'' என்று தெரிவித்துள்ளார்.