வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (14:33 IST)

திடீரென எழுந்த சத்தம்… வீடுகளில் விரிசல் – திண்டுக்கல்லில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அருகே உள்ள கொன்ரங்கி கீரனூர் என்ற பகுதியில் இன்று நள்ளிரவு பலமான சத்தத்துடன் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதையடுத்து பல வீடுகளில் விரிசலும் ஓடுகள் விழுந்தும் உள்ளன. இதையடுத்து மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

இது சம்மந்தமாக அப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அருகாமைப் பகுதிகளில் பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டதால் இந்த நில அதிர்வு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.