திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (18:15 IST)

3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி...ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும்  பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்  குளிக்க முயற்சிசித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கள்ளச்சாராயம புகாரில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் (35) என்பவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்ததாக தெரிகிறது.

இதையறிந்த அவரது மனைவி மணிமேகலை (30) தனது 3 குழந்தைகளுடன்  ஆவட்ட  ஆட்சித்தலைவர் கூடுதல் அரங்ககில் நடைபெற்ற   குறைன் தீர்ப்புக் கூட்டத்தில் தான் மறைத்துவைத்த, மண்ணெண்ணெய்யை தன் மீதும் தன் குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

பின்னர் வாணியம்பாடி,  காவல் கண்காணிப்பாளர் சுரெஷ் பாண்டியன் மணிமமேகலையின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி,  உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.