ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:18 IST)

முல்லைபெரியாறு பாதுகாப்பை மறுஆய்வு செய்ய அவசியமில்லை: அமைச்சர் துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேரள மாநில அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அந்த அணையின் பாதுகாப்பை தற்போது மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
 
அணையில் நீர்க்கசிவு சுண்ணாம்பு வெளியேற்றும் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாக உள்ளது என்றும் தமிழக உரிமைகளையும் விவசாயிகள் நலன்களையும் பாதுகாக்க திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்