செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (11:50 IST)

சாட்டை துரைமுருகன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு!

சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சாட்டை முருகனை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த பெண்கள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சாட்டை துரைமுருகன் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என அவரது மனைவி புகார் அளித்த நிலையில் தற்போது சாட்டை துரைமுருகன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதில் ஒரு சில பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்