1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (13:06 IST)

பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது: சட்ட ஆணையத்திற்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்

duraimurugan
பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.
 
அமைச்சர் துரைமுருகனின் கடிதத்தில், ‘திமுகவைப் பொறுத்தமட்டில் பொது சிவில் சட்டமே நிறைவேற்றக் கூடாது என்பதுதான் இறுதியான, தீர்க்கமான கொள்கை பிரகடனம் என்றும், பாஜகவின் ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற கொள்கையின் விளைவாக பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்.
 
எங்களுடைய இன்னொரு ஆலோசனை என்னவெனில், மதங்களுக்கிடையேயான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன், ஒன்றிய அரசு இந்துமத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும் என்பது என்றும் அவர் தனது கடிதத்த்ஹில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran