1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (16:39 IST)

வைகோவையும் எம்ஜிஆரையும் துரோகி என கூறிய துரைமுருகன்… முகம்சுழிக்கும் தொண்டர்கள்!

உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக கட்சி நிர்வாகிகளோடு பேசிய போது துரைமுருகன் சம்பத், எம் ஜி ஆர் மற்றும் வைகோ ஆகியவர்கள் திமுகவுக்கு துரோகமிழைத்தவர்கள் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர்  9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்துள்ள நிலையில் சீட் கிடைக்காத திமுகவினரை தேற்றும் விதமாக ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.

அப்போது ‘சீட் கிடைக்கவில்லை என யாரும் வருத்தப்பட வேண்டாம். சீட் கிடைக்காதவர்களுக்கு அடுத்து வரும் கூட்டுறவு சங்கம், ஆவீன் சங்கம் போன்றவற்றில் பதவிகள் கிடைக்கும். ஆனால் யாரும் கட்சிக்கு துரோகம் செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் யாராக இருந்தாலும் நான் கட்டம் கட்டிவிடுவேன். திமுக எத்தனையோ துரோகிகளை பார்த்துள்ளது. அண்ணா காலத்தில் சம்பத், பிறகு கலைஞர் காலத்தில் எம் ஜி ஆர் மற்றும் வை கோ ஆகியோர் என அனைவரையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். எனப் பேசியுள்ளார். இப்போது வைகோ திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் துரைமுருகனின் இந்த லூஸ் டாக் இரு கட்சி தொண்டர்களுக்கும் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.