துரைமுருகன், டி.ஆர்.பாலு மட்டுமே வேட்புமனு தாக்கல்: போட்டியின்றி தேர்வா?
துரைமுருகன், டி.ஆர்.பாலு மட்டுமே வேட்புமனு தாக்கல்
திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வரும் 9ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூபாய் 1000 கட்டணம் செலுத்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது
இதனையடுத்து சற்றுமுன் வரை திமுக் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் சார்பிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு சார்பிலும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். திமுக பொருளாளர் பதவிக்கு எ.வல்.வேலு, கனிமொழி, ஆ ராசா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டபோதிலும் இதுவரை அவர்கள் சார்பாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருந்தாலும் வேறு யாரும் சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என திமுக வட்டாரங்கள் கூறுவதால் துரைமுருகன் பொதுச்செயலாளராகவும், டி.ஆர்.பாலு பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது