1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (09:01 IST)

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி

மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
 
ஆனால் இந்த கொண்டாட்டத்தை முழுமையாக கொண்டாட முடியாத நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது