வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (08:13 IST)

நம் கையில் மாநில அரசு: நாம் காட்டுவதே மத்திய அரசு: கெத்து காட்டும் திமுக!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை துவங்கப்பட்டுவிட்டது. 

 
தமிழகத்தை பொருத்தவரையில் திமுக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன. அந்த வகையில் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட இப்போதே உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
 
இன்று காலை 6 மணி முதலே திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிய தொடங்கிவிட்டனர். அதேபோல் ஸ்டாலின் வீட்டின் முன்பும், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன்பும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
 
அதேபோல், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், நம் கையில் மாநில அரசு, நாம் காட்டுவதே மத்திய அரசு என்ற வாசகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.