செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (18:15 IST)

இப்போ ஓகே....அப்புறம் நடக்காமல் இருந்தால்.....எச்சரித்த துரைமுருகன்

காவிரி மேலாண்மை ஆணையம் முதல் தடவை தண்ணீர் பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நியாயமல்ல, நடப்பது வேறு என துரைமுருகன் கூறியுள்ளார்.

 
இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதற்கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் கூறியதாவது:-
 
காவிரி மேலாண்மை ஆணையம் முதல் தடவை தண்ணீர் பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நியாயமல்ல, நடப்பது வேறு.
 
இதேபோல் காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு மாதத்திற்குரிய தண்ணீரை முறையாக பெற்றுத் தந்தால் வாழ்த்துவோம் என்றும் அவர் கூறினார்.