எட்டு வழிச்சாலை நல்ல திட்டம்தான் : முட்டுக்கொடுக்கும் தனியரசு(வீடியோ)
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் அருள் அவர்களது சகோதரரின் திருமண விழா கரூரில் உள்ள சின்ன கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவரும். எம்.எல்.ஏவுமான தனியரசு நேரில் மணமக்களை வாழ்த்தியதோடு., பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சேலம் – சென்னை 8 வழிச்சாலை தற்போது பொதுமக்களுக்கு கிடைத்த ஒரு நல்ல திட்டம் ஆகவே, பொதுமக்கள் தங்களுடைய நிலத்தை கையகப்படுத்தும் போது, அதற்கு உண்டான நஷ்ட ஈட்டு தொகையை, அதிகப்படுத்தி, விவசாயிகளின் மனம் கோனாமல், அவர்களிடம் நிலத்தை பெற்று, அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அந்த திட்டத்தை முதன் முதலில் வரவேற்ற கட்சியும் நாங்கள் தான்.
மேலும்., சென்னை – கோவை 8 வழிச்சாலை தான் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் விருப்பம். அதற்கான திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துள்ளதற்கு, வரவேற்பையும் தெரிவித்தார். அதே நேரத்தில் மாநில சுயாட்சியின் தத்துவத்திற்கு எதிராக, ஒரு கவர்னர் மாநிலத்தில் ஆங்காங்கே ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தார். அப்போது, தி.மு.க வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருப்புக்கொடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார். மேலும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே, முதல்வரும், துணை முதல்வரும் ஆளுநரின் நடவடிக்கையை அதிகபெரும்பான்மையோடு, கண்டிப்பார்கள் என்றார்.
மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின்பு, பலவீனமாக அ.தி.மு.க ஆட்சியை பயன்படுத்தியுள்ள மோடி ஆட்சி போன்று, இந்த நேரத்தில் கட்சி ஆரம்பித்தால், ஜெயித்து விடலாம் என்று நடிகர்கள் களமிறங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டிய, தனியரசு,., நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் தற்போது கட்சி ஆரம்பித்து வருகின்றனர். ஆனால் இனி நடிகர்கள் நாடாள மக்கள் விட மாட்டார்கள் என்று உறுதிபட தெரிவித்தார்.