செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (16:30 IST)

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்…. துக்ளக் சர்ச்சை கார்ட்டூன் வெளியீடு!

தமிழக அரசு விரைவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை பொது இணையதளத்தில் பதிவேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ஆகம பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசியுள்ள தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ”அர்ச்சகர் பயிற்சிகான பள்ளிகள் புணரமைக்கப்பட்டு புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருவதை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசின் இந்த முடிவுகளுக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் துக்ளக் நாளிதழ் வெளியிட்டுள்ள கார்ட்டூன் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. அதில் விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி வீரமணி மற்றும் திக தொண்டர் ஆகியவர்கள் இடையே நடக்கும் உரையாடல் போல உள்ளது.